Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகிழ்ச்சியின் உச்சத்தில் அஸ்வின்!

In கிாிக்கட்
Published: 06:42 GMT, Jul 30, 2017 |
0 Comments
1490
icon_com
This post was written by : Anojkiyan
ash

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இந்தியக் கிரிக்கெட் சபை நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ளது.

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூலம் தனது 50வது டெஸ்ட் போட்டியில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்ததை நினைவுக்கூறும் முகமாகவே இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) போட்டி முடிவடைந்ததன் பின்னர் இதனை பெற்றுக்கொண்ட அஸ்வின், மகிழ்ச்சி பொங்க நினைவுச் சின்னத்துடன் கூடிய புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், “இப்போட்டி மறக்கமுடியாத டெஸ்ட் போட்டி. மகிழ்ச்சியுடன் நினைவில் இருக்கும். இந்த நிலைக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஸ்வின் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் 50 டெஸ்ட் போட்டிகளில் 275 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg