Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்தள விமான நிலையத்தில் மாற்றம்!

In இலங்கை
Published: 15:52 GMT, Jul 31, 2017 |
0 Comments
1616
icon_com
This post was written by : Ravivarman
Mattala_Airport

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அளுத்கம பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மத்தள சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் இது தொடர்பான இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

விமான நிலையத்தில் இருந்து பெறப்படும் இலாபத்தை அதிகரிப்பதுடன் பல அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் இதனைச் செயற்படுத்துவதற்கு நிர்வாக மாற்றம் உதவிபுரியும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg