Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதியமைச்சரை பதவி நீக்க ஜனாதிபதியிடம் கோரவுள்ள ஐ.தே.க.?

In இலங்கை
Updated: 08:42 GMT, Aug 12, 2017 | Published: 07:07 GMT, Aug 12, 2017 |
0 Comments
1322
This post was written by : Risha

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமைப்பீடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதியமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐ.தே.க. உறுப்பினர்கள் சிலரும் நேற்று (வெள்ளிக்கிழமை) கையெழுத்திட்டதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான தீர்மானத்தை விமர்சித்து, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதாக, நீதியமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜேதாச ராபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிப்பது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.தே.க. கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg