Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சொந்த மண்ணில் தொடரும் சோகம்: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்

In விளையாட்டு
Updated: 04:10 GMT, Sep 1, 2017 | Published: 04:06 GMT, Sep 1, 2017 |
0 Comments
1260
icon_com
This post was written by : Risha
India Sri Lanka Cricket ODI

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 168 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான பகலிரவு போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியா அணி சார்பில், அணித்தலைவர் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் விளாசினர். அவர்கள் முறையே 131 மற்றும் 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களையும், லசித் மாலிங்க, விஷ்வ பிரனாந்து மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 376 என் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 42.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து வெறும் 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களையும், சிறிவர்தன 39 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணிச்சார்பில் பந்து வீச்சில் பும்ரா, பாண்டியா மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களளை வீழ்த்தினர்.

நேற்றைய போட்டியின் வெற்றியை தொடர்ந்து, ஐந்து நாள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவுச்செய்யபட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg