Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை வழக்கு: சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்

In இலங்கை
Published: 05:32 GMT, Sep 1, 2017 |
0 Comments
1238
This post was written by : Ravivarman
images (2)

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கின் கண்கண்ட சாட்சியத்திற்கு அனுராதபுர சிறைச்சாலையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முறையிடப்பட்டு உள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சுன்னாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை புரிந்து படுகொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கின் கண்கண்ட சாட்சியம் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கொன்றில் சிறை த்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் குறித்த சாட்சியம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்குக்காக, இளைஞனின் படுகொலை வழக்கின் சாட்சியம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை அழைத்து வரப்பட்டு இரவு அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டார்.

அதன் போது அன்றையதினம் இரவு அனுராதபுர சிறைச்சாலையில் வைத்து சாட்சியத்திற்கு இனம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அது தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இளைஞன் படுகொலை வழக்கின் சாட்சியம் முற்படுத்தப்பட்ட வேளை நீதவானிடம் சாட்சி தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg