Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வெயிலில் இருந்து கைககளை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

In
Published: 09:48 GMT, Sep 1, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Anojkiyan
thinkstock-handcream-jpg-050021-jpg_102454

இங்கு வெயிலில் இருந்து உங்கள் கைககளை பாதுகாத்துக் கொள்ள உள்ள வழிமுறைகளை பார்க்கலாம்.

எலுமிச்சை சாற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், இது பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய எலுமிச்சை சாற்றினை கருமையாக இருக்கும் கைகளில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, தவறாமல் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாறானது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

தயிர் கூட சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதற்கு தயிரை கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறை வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. தக்காளி சாற்றினை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் பொலிவோடு இருக்கும். மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிப்படைந்த இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதை வாரம் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலே கூறப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றி கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை காத்திடுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg