Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன்(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 05:36 GMT, Sep 3, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Kemasiya


இன்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலமையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில் ஒன்பது அமைச்சரகள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்திராகாந்திக்கு பின்னர் இரண்டாவதாக பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பேற்கும் பெண் அமைச்சர் என்னும் பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்: ஒன்பது பேர் பதவியேற்பு

மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக ஒன்பது அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கின்றனர்.

காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந், ஒன்பது பேருக்கும் பதவிப்பிரமாணமும், இரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார்.

இதில் சிவ் பிரதாப், சத்யபால் சிங்,  ராஜ்குமார் சிங்,  அஷ்வினி சவுபே,  ஆனந்த்குமார் ஹெக்தே,  கஜேந்திர சிங் ஷெகாவத், வீரேந்திர குமார், அல்போன்ஸ் கண்ணன்தனம்,  ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக சிவ் பிரதாப் சுக்லா, அஸ்வின் குமார் சவுபே, வீரேந்திர குமார், அனந்த்குமார் ஹெக்டே, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதவியேற்றுள்ளனர்.

மேலும் அமைச்சரவை அமைச்சர்களாக முக்தர் அப்பாஸ் நக்வி, பியூஷ் கோயல் ஆகியோரும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg