Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசிய சகவாழ்வு அமைச்சினது நடமாடும் சேவை!

In இலங்கை
Published: 08:50 GMT, Sep 3, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Ravivarman
N (1)

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தினை மையப்படுத்தி நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளது.

மேற்படி நடமாடும் சேவை அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் இதனை ஒழுங்கு செய்திருந்தார்.

இதன்போது இறப்பு, பிறப்பு, விவாகச்சான்றிதழ்கள் விடயம், அரச காணி, கமநல சேவை, சட்ட உதவி ஆணைக்குழு, அடிப்படை மனித உரிமைகள், ஓய்வூதியம், நீர், மின்சாரம், உள்ளிட்ட 25 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையில் 17 அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றின.

மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், எஸ். வியாழேந்திரன், அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.எம்.ஈ. விக்கிரமசிங்ஹ, உதவிச் செயலாளர் சந்திரிகா ரூபசிங்ஹ, கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்தின தேரர், உதவிப் பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பயனாளிகளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

N (3) N (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg