Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வளமான நாடு’ – பொருளாதார பிரகடனம் வெளியீடு

In இலங்கை
Published: 05:14 GMT, Sep 5, 2017 |
0 Comments
1198
This post was written by : Varshini
president n ranil

இலங்கையை வளமான நாடாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட ‘2025இல் வளமான நாடு’ எனும் பொருளாதார கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

இந்த பிரகடனத்தில், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிர்வரும் மூன்று வருட காலத்தில் வினைத்திறன் மிக்க வகையில் பொருளாதார மூலோபாயங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, பொருளாதாரத்தை மேம்படுத்தல், சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், நவீன தொழிநுட்பத்தின் ஊடாக உலகலாவிய ரீதியில் இலங்கையை போட்டித்தன்மை மிக்க நாடாக மாற்றுதல், சகல ஊழியர்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்தல், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்தல், விவசாயத்தை இலக்காக கொண்ட பல திட்டங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நிகழ்வின் இறுதியில், இளைஞர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகளையும் ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள், பொருளியல் வல்லுநர்கள், சர்வ மத தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg