Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

5 பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை! – கல்வியமைச்சின் அறிவிப்பு

In இலங்கை
Published: 10:15 GMT, Sep 5, 2017 |
0 Comments
2282
This post was written by : Puvanes
education001

சகல அரசாங்கப் பாடசாலைகளினதும் வருட இறுதித் தவணைக் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் நாளை முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக முழுமையாக பயன்படுத்தப்படும் ஐந்து பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி கல்வி செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப்பரீட்சை நிலையங்களாக இயங்கிய பாடசாலைகள் அனைத்தும் புதன்கிழமையும் ஏனைய பாடசாலைகள் செப்டெம்பெர் 11 ஆம் திகதியும் மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg