Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமைச்சர் மனோவை கடுமையாக சாடியுள்ள கிழக்கு முதலமைச்சர்

In இலங்கை
Published: 04:37 GMT, Sep 11, 2017 |
0 Comments
1300
icon_com
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு விஜயத்தின் போது அமைச்சர் மனோ கணேசன் கூறிய கருத்துக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ‘கிழக்கிலே இன உறவு சீராக இல்லை என்று அமைச்சர் மனோகணேசன் சமீபத்தில் மட்டக்களப்புக்கு வந்தபோது கூறிவிட்டுச் சென்றிருப்பது அவரது அறிவு, கிழக்கின் இன நல்லுறவு விடயத்திலே சுத்த சூனியமாக இருப்பது புலனாகின்றது.

சகவாழ்வுக்காகப் பாடுபடுவதாகக் கூறிக் கொள்கின்றவர்கள் அவர்கள் கூறும் சீர்குலைந்துள்ள இன உறவைச் சீர் படுத்துவதற்காக என்ன செய்தார்கள்? என்னென்ன யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தினால் அது ஆக்கபூர்வமாக இருக்கும். அதுதான் காலத்திற்கேற்ற தேவையும் கூட.

கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம் இருப்பதை அவர் ஆதாரத்துடன் கூறினால் அதுபற்றிப் பரிசீலிக்கலாம். இதுபோன்ற கூற்றுக்கள் இன வாதத்தைத் தூண்டி அரசியல் பிழைப்பு நடத்தும் அருவருக்கத்தக்க கலாச்சாரத்திலிருந்து இன்னும் சிலர் விடுபடவில்லை என்பதை நிரூபிக்கின்றன’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg