Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பத்திரிகையாளர் கொலை குறித்து விசாரணை தீவிரம்

In இந்தியா
Updated: 08:28 GMT, Sep 11, 2017 | Published: 08:28 GMT, Sep 11, 2017 |
0 Comments
1253
This post was written by : Kemasiya

பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு, ஆந்திராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

இந்த கொலை தொடர்பான நுண்ணிய விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இவர் நக்சலைட்டுகள் என்ற தீவிரவாதிகளை சரணடைய வைத்ததால் அவர்கள் தான் இவரை சுட்டுக்கொன்றது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கவுரிலங்கேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கமராவில் வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த வாலிபர் ஹெல்மெட் மற்றும் ஜர்கின் அணிந்து உள்ளார். 2 பேர் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதும் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை ஆந்திர பொலிஸாருக்கு கர்நாடக பொலிஸார் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நக்சலைட்டுகளை பிடிக்க கர்நாடகாவைச் சேர்ந்த சிறப்பு புலனாய்வு படை (எஸ்.ஐ.டி)பொலிஸாலர்  ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

பெண் பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது, பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளது. கொலை கும்பல் விரைவில் பிடிபடும். இதுதொடர்பாக நானும் முதல் அமைச்சர் சித்தராமையாவும் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம் என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg