Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இர்மா புயல் பாதிப்பு – உதவ முன்வந்துள்ள பிரித்தானியா

In
Published: 12:16 GMT, Sep 11, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Suganthini
uk

பிரித்தானியாவிற்குச் சொந்தமான  சில பகுதிகள் இர்மா  புயலால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் மேலதிக உதவி நடவடிக்கைகளை   மேற்கொள்வதற்கு  பிரித்தானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அண்மையில் வீசிய இர்மா புயலால் அங்கியுலா, துர்கீஸ், கெய்கோஸ் மற்றும் பிரித்தானியாவின் வெர்ஜின் தீவுகள்  ஆகியனவும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி நடவடிக்கைகளுக்காக படையினரை பிரித்தானியா அனுப்பிவைத்துள்ளது. இந்நிலையில்,  படை வீரர்கள் 500 பேர் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் படைவீரர்களுடன் பொலிஸாரும் இணைந்துள்ளனர். பொலிஸ்உத்தியோகத்தர்கள் 55 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, நிவாரண நடவடிக்கைகளுக்காக 32 மில்லியன் பவுண்ட் நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி மாத்திரமே எஞ்சியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை முன்னெடுப்பதற்காக மேலதிக நிதி உதவியை வழங்கவுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் இந்த நிதி உதவி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கரீபியன் பிராந்தியத்தை கடந்த வார இறுதியில் இர்மா புயல் தாக்கியதைத் தொடர்ந்து, 28 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இர்மா புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அங்கு மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், அங்கு பல பாதிப்புகளையும் இந்தப் புயல் ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg