Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியா, நியூஸிலாந்துடனும் வர்த்தக பேச்சுவார்த்தையை எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றியம்

In ஐரோப்பா
Published: 10:06 GMT, Sep 13, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியம் அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்துடன் திறந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையில் அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐரோப்பா எப்போதும் ஒரு கவர்ச்சிகரமான பொருளாதார இடைவெளியை கொண்டுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து உலகெங்கிலுமுள்ள எமது பங்காளிகள் எம்முடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளனர். நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்புடன் கனடாவுடனான வர்த்தக உடன்படிக்கையை முடித்துள்ளோம்.

புதிய எதிர்கால பொருளாதார கூட்டணியில் ஜப்பானுடன் அரசியல் உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இவ்வாண்டின் இறுதியில் மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனும் ஒரே மாதிரியான உடன்படிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எனவே அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்துடன் திறந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என இன்று பரிந்துரைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg