Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனிக்கு நிகர் யாருமில்லை: முதல்முறையாக புகழ்ந்தாா் இலங்கை வீரர்

In கிாிக்கட்
Updated: 07:06 GMT, Sep 14, 2017 | Published: 06:59 GMT, Sep 14, 2017 |
0 Comments
3821
This post was written by : Anojkiyan

ஒரு போட்டியை கணிப்பது என்பதில் உலகில் டோனிக்கு நிகர் யாரும் இல்லையென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மார்வன் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் அமைதியான வீரரான மார்வன் அத்தபத்து, முதல் முறையாக ஒரு வீரரை இவ்வாறு புகழ்ந்து கூறியிருப்பது டோனி இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அவர் டோனி குறித்து மேலும் கூறுகையில், டோனியைப் போன்ற ஒரு சிறந்த பினிஷரை கடந்த கால் நூற்றாண்டில் பார்த்ததில்லை. டோனி தங்களுக்கு எதிராக ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 183 ஓட்டங்கள் எடுத்தார். அவரிடம் கிரிக்கெட் கொப்பி புக் ஸ்டைல் கிடையாது. இதற்கும் மேலாக ஒரு போட்டியை கணிப்பது என்பதில் உலகில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

சூழ்நிலைக்கேற்ப விளையாடக்கூடியவர். கடந்த 25 ஆண்டுகளில் நான் பார்த்த வரையில் அவரைப்போல ஒரு பினிஷர் கிடையாது என்றே கூறுவேன். ஸ்ரீஜாவேத் மியாண்டட், மைக்கேல் பெவன், அர்ஜுனா ரணதுங்கா ஆகியோரை நாம் குறிப்பிடலாம் ஆனால் இப்போது அவர் உள்ள இடம், அதுவும் கொப்பி புக் துடுப்பாட்டம் உத்தி இல்லாமல் இத்தகைய உயர்வான இடத்துக்கு வந்துள்ளது பெரிய நிகழ்வு தான்’ என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg