Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்தங்களுடன் வந்தால் பரிசீலனை: விக்னேஸ்வரன்

In இலங்கை
Published: 11:53 GMT, Sep 14, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Ravivarman
images

20வது அரசியலமைப்பு திருத்தங்களுடன் வந்தால், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படுமென வட.மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“20வது திருத்த சட்டம் தொடர்பாக எந்தவித திருத்தங்களும் வரவில்லை. அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டால், முறையாக பரிசீலித்து சரியான முடிவுக்கு வருவோம்.

இதுவரையில் திருத்தங்கள் செய்யப்பட்டு எமக்கு அனுப்பிவைக்கப்படவில்லை. அண்மையில், கிழக்கு மாகாண சபையில் 20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு தமக்கு ஏதோ ஒரு வகையில் தெரிவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சபையினர் தெரிவிக்கின்றனர். அவர்கள் விளங்காத்தன்மையினால் தமது ஆதரவினை தெரிவித்திருக்ககூடும்.

அதைப்பற்றி எமக்கு சரியாகத் தெரியாது. தற்போது இருக்கும் நிலையில், எமக்குத் தரப்பட்டது முன்னைய ஆவணம் மட்டுமே புதிய ஆவணம் திருத்தங்களுடன் வந்தால், கட்டாயம் பரிசீலணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)