Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அளவில் அஜித் முதலிடத்தில்

In சினிமா
Updated: 09:49 GMT, Sep 15, 2017 | Published: 09:49 GMT, Sep 15, 2017 |
0 Comments
5482
This post was written by : Surenth

அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தாலும் ‘பாகுபலி 2’ திரைப்படம் செய்த சாதனைகளையும் முறியடித்து வருகிறது.

4 வார முடிவில் திரைப்படம் ரூபாய் 170 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், Star Wars பட சாதனையை முறியடித்து உலகளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீஸர் என்ற பெருமையை விவேகம் திரைப்பட டீஸர் தற்போது பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், விவேகம் டீஸர் இன்னும் 17,000 லைக்குகள் பெற்றால் முதலிடத்தில் இருக்கும் ஸ்டார் வார்ஸ் – த லாஸ்ட் ஜெடி டீஸரை முந்தி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித் ரசிகர்கள் 3 நாட்களுக்குள் அந்த 17,000 லைக்குகளை விவேகம் டீஸருக்கு அளித்து புதிய உலக சாதனையை அந்த டீஸர் படைக்க வைத்துள்ளனர். தற்போது ஸ்டார் வார்ஸ் – த லாஸ்ட் ஜெடி டீசர் 5,72,000 லைக்ஸ் பெற்ற நிலையில், விவேகம் டீஸர் 5,73,000 லைக்குகளை எட்டியிருக்கிறது.

உலகத் திரைப்பட வரலாற்றில், ஒரு திரைப்படத்தின் டீஸரில், அதிக லைக்குகளைப் பெற்றுள்ள இந்தியப் படம் அதுவும் ஒரு தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமை அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

விவேகம் டீசருக்கு இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளனர். ஆனால், ஸ்டார் வார்ஸ் – த லாஸ்ட் ஜெடி டீசருக்கு 39 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. அந்த விதத்தில் பார்த்தால் ஸ்டார் வார்ஸ் டீசரை விட பாதி அளவே கிடைத்துள்ள பார்வைகள் எண்ணிக்கையில் விவேகம் டீசர் அதிக லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் உலகளவில் டீசரில் அதிக லைக்குகள் பெற்று சாதனை படைத்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் நடிகர் அஜித்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg