Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பார்சிலோனாவை துரத்தும் துரதிஷ்டம்: டெம்ப்ளே முன்று மாதங்களுக்கு ஒய்வு

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:53 GMT, Sep 20, 2017 | Published: 07:52 GMT, Sep 20, 2017 |
0 Comments
1102
icon_com
This post was written by : Anojkiyan
dembele

முன்னணி கால்பந்து கழக அணியான பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான ஓஸ்மானே டெம்ப்ளே, எதிர்வரும் முன்று மாதங்களுக்கு அணியில் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இடது காலின் தொடைப்பகுதியில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் முன்று மாதங்களுக்கு ஒய்வில் இருக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதற்கமைய அவர் முன்று மாதங்களுக்கு அணியில் இடம்பெற மாட்டார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கேடேஃப் அணிக்கெதிரான போட்டியின் 23வது நிமிடத்தில் டெம்ப்ளேவின் இடது காலின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான நெய்மர், பரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு சென்றதால், டோர்ட்மண்ட் அணியின் டெம்ப்ளேவை பார்சிலோனா அதிக தொகை கொடுத்து வாங்கியது. தற்போது டெம்ப்ளே அணியில் இடம்பெறாதது பார்சிலோனாவிற்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg