Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையத்திலிருந்து பயங்கரவாத உள்ளடக்கத்தை நீக்க வலியுறுத்தல்

In
Updated: 07:41 GMT, Sep 21, 2017 | Published: 07:29 GMT, Sep 21, 2017 |
0 Comments
1239
This post was written by : Risha
UK11

இணையத்திலிருந்து பயங்கரவாத உள்ளடக்கத்தை வெகுவிரைவில் நீக்குமாறு, சமூக வலைத்தள நிறுவனங்களை பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரித்தானிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், புதிய பயங்கரவாதத் இணைப்புகளை கண்டறிந்து ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அகற்றப்படுவதை உறுதிசெய்வதே தமது நோக்கம் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இது பயங்கரவாதிகள் தமது புதிய பிரசாரங்களை ஆதரவாளர்களிடம் பகிர்ந்து கொள்வதனை தடுப்பதற்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மே-யின் கருத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் மற்றும் இத்தாலி பிரதமர் ஆகியோரும் ஆதரித்துள்ளனர்.

பொருளாதாரம், தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும் என இத்தாலி பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை மிகவும் திறமையான முறையில் மேம்படுத்த வேண்டும். திறமையான வழிமுறைகளை பின்பற்றி விரைவில் இதனை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg