Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமானப்படை தினத்தை முன்னிட்டு பயிற்சிகள் ஆரம்பம்

In இந்தியா
Published: 10:19 GMT, Sep 23, 2017 |
0 Comments
1240
icon_com
This post was written by : Kemasiya

இந்திய  விமானப்படை தினத்தை (IAF) முன்னிட்டு அதனை கொண்டாடும் முகமாக விமானப்படை இராணுவத்தினரால் அக்ரோபாக்டிஸ் மற்றும் துப்பாக்கி சுட்டு பயிற்சி ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1932 முதல் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 8ஆம் திகதி விமானப்படை தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இவ் வருடமும் குறித்த தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பயிற்சிகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு காசியாபாத் மாவட்டத்தில் ஹிந்த்ன் விமானப்படை நிலையத்தில் குறித்த 85ஆவது விமானப்படை தின நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய பாதுகாப்பில் விமானப்படையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இந் நிகழ்வு கொண்டாடப்புடுவதாக  கூறப்படுகின்றது.

மேலும் விமானப்படை தினத்தை முன்னிட்டு அந் நாளில் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாகவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

j hujgjmgfc dvbdde

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg