Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த முயற்சியால் ஏரியை சுத்தம் செய்யும் இளைஞனுக்கு பிரதமர் என்ன கூறினார்?

In இந்தியா
Updated: 03:16 GMT, Sep 25, 2017 | Published: 03:16 GMT, Sep 25, 2017 |
0 Comments
2186
This post was written by : Kemasiya

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தால் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் இளைஞனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆல் இந்திய வானொலியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பான “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்  “தனது சொந்த முயற்சியால் தால் ஏரியில் இருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலாலுக்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீா் மாநிலத்தை சோ்ந்த பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த பிலால்தர் (வயது 18) என்ற இளைஞன், கடந்த ஐந்து வருடங்களாக தனது சொந்த முயற்சியில்  தால் ஏரியை சுத்தம் செய்து வருகின்றார். இவர் தினமும் தான் சுத்தம் செய்யும் குப்பைகளை 150 முதல் 200 ரூபா வரைக்கும் விற்று தனது தேவைக்கான பணத்தை பெற்றுக் கொள்கின்றார்.

இவரது முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீநகர் நகராட்சி பாராட்டு தெரிவித்து, குடிமைத் தூதர் என்ற பொறுப்பையும் பிலாலுக்கு வழங்கியது.

நரேந்திர மோடியின் தூய்மையான இந்தியா திட்டத்தின் கீழ்,  சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் பிலால் தனது சொந்ந முயற்சியில் குறித்த ஏரியை சுத்தம் செய்வது எல்லோருக்கும் சிறந்த முன் உதாரணமாகும் என பலரும் பிலாலுக்கு பராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg