Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு விட்டது: காஷ்மீர் இராணுவம்

In இந்தியா
Updated: 06:32 GMT, Sep 28, 2017 | Published: 06:32 GMT, Sep 28, 2017 |
0 Comments
1357
This post was written by : Surenth

ஜம்மு-காஷ்மீரில் அமைதியைக் குலைத்து வந்த தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு விட்டதாக தெற்கு காஷ்மீர் இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ராஜூ தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தீவிரவாதம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாகவும் இனி அரசியல் ரீதியாக இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது காஷ்மீரில் எந்த ஒரு பகுதியும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை எனவும், தீவிரவாதிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தற்போது ஆயுத ரீதியான தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு காஷ்மீர் மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மேஜர் ஜெனரல் ராஜூ தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg