Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டடம் இடிந்ததை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Published: 11:01 GMT, Oct 20, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Kemasiya
91892_thumb

நாகபட்டிணத்தில் அரச போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான கட்டடத்தின் கூரை இடிந்து வீழ்ந்தமையை கண்டித்து, தி.மு.க.வினர் ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த கட்டடம் இடிந்து வீழ்ந்ததை கண்டித்து, தி.மு.க. சார்பில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதில்,  அப் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.

இதன் போது இந்த கட்டடம் குறித்து பல முறை தெரியப்படுத்தியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதமை கண்டிக்கத்தக்கது. மற்றும் இவ் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாகை மாவட்டத்தின், அரச போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான கட்டடத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில், 8 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு, மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg