Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் கேரள கஞ்சா மீட்பு: ஒருவர் கைது

In இலங்கை
Updated: 11:33 GMT, Oct 21, 2017 | Published: 11:33 GMT, Oct 21, 2017 |
0 Comments
1322
icon_com
This post was written by : Risha
002

கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 13 கிலோகிராம் கேரள கஞ்சா கிளிநொச்சி பொலிஸாரனால் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், கஞ்சா பொதியை வைத்திருந்தவர் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டும் உள்ளார்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன தலைமையிலான விசேட மது ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடல் நடவடிக்கையின்போதே குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg