Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் பண்ணையாளர்கள் போராட்டம்!

In இலங்கை
Updated: 16:30 GMT, Oct 24, 2017 | Published: 16:27 GMT, Oct 24, 2017 |
0 Comments
1367
This post was written by : Surenth

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் கால்நடை பண்ணையாளர்கள் மேச்சல் தரவையாக பயன்படுத்தும் புல் வெட்டி ஏற்றுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளுக்காக புல் வெட்டி ஏற்றுவதற்கு அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழ்மை) தமது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வறட்சியான நிலையில் கால்நடை வளர்ப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மேச்சல் தரை இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் குளக்கட்டின் அபிவிருத்திக்காக புற்கள் பயன்படுத்தப்படுகின்றது.

இதற்கான புற்கற்றைகளை பெற்றுக்கொள்வதற்கு சில பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன. இதற்கமைய, கனகாம்பிகை குளத்தில் புற்கற்றைகள் பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த ஒப்பந்தகாரர்களிற்கு பண்ணையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

IMG_9182 IMG_9183

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg