Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் டிசம்பரில் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையகம் அறிவிப்பு

In இந்தியா
Updated: 07:31 GMT, Oct 26, 2017 | Published: 06:06 GMT, Oct 26, 2017 |
0 Comments
1209
This post was written by : Kemasiya
007-201604031

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி முதல்கட்ட தேர்தலும் 14 ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் டிசம்பர் 18 ஆம் திகதி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, குஜராத் மாநிலத்தில் 4.3  கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில்  தேர்தலுக்காக   50,128 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் இவற்றில் 102 வாக்குச்சாவடிகள் மகளிர் வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  அனைத்து தேர்தல் வாக்குச் சாவடிகளிலும் மாற்றுதிறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்தள பாதைகள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, வன்முறைகள் இடம்பெறலாம் என்று கருதப்படும் வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் மத்திய பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg