Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொடு முடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து விரைவில் விவசாயிகள் பயன்பெறுவர்: முதல்வர்

In இந்தியா
Updated: 11:12 GMT, Oct 27, 2017 | Published: 11:12 GMT, Oct 27, 2017 |
0 Comments
1240
This post was written by : Kemasiya

கொடு முடியாறு  நீர்த்தேக்கம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் திறந்துவிடப்படவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நான்குநேரி, ராதாபுரம் பகுதி பாசன வசதிக்காக இந்த நீர்த்தேக்கம் திறந்துவிடப்படுவதாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

”நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கக் கோரி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்கள் வேண்டுகோளை ஏற்று, கொடு முடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நவ.1 ஆம் திகதி முதல் அடுத்தாண்டு மார்ச் 31 ஆம் திகதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

இதனால், நெல்லை மாவட்டம் நான்குநேரி மற்றும் ராதாபுரம் தாலுகாக்களில் உள்ள 5 ஆயிரத்து 780 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மூலம் உயர் மகசூல் பெறலாம்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg