Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சல் தெலுங்கு பதிப்பு வெளியாகுவதில் தாமதம்!

In சினிமா
Updated: 07:10 GMT, Oct 28, 2017 | Published: 07:07 GMT, Oct 28, 2017 |
0 Comments
1374
This post was written by : Elakkiya

விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மெர்சல்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்புக்கு வழங்கியது போன்று தெலுங்கு பதிப்புக்கும் நியாயமான தணிக்கைச் சான்று வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பான வசனங்கள் மெர்சல் திரைப்படத்தில் உள்ளதால் பா.ஜ.க. சார்பில் திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக மறு தணிக்கைக்கு அனுப்பி சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவ்வாறு வசனங்கள் எவையும் நீக்கப்படவில்லை.

இவ்வாறிருக்க மெர்சல் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு நேற்யைதினம் ஆந்திராவில் வெளியிட தீர்மானிக்கப்படடிருந்தது. எனினும் தணிக்கை குழுவின் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.

ஜி.எஸ்.டி உள்ளிட்ட வசனங்களால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குவது தொடர்பில் தயாரிப்பாளர் தரப்பில் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, ‘ தமிழ் பதிப்புக்கு வழங்கியது போன்றே தெலுங்கு பதிப்புக்கும் நியாயமான தணிக்கைச் சான்று வழங்கப்படும். முன்கூட்டியே தணிக்கைச்சான்று தரக்கோரி தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டாம். விஜயின் தெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்குவதற்கு வழக்கமான நடைமுறைகளே பின்பற்றப்படுகிறது. திரைப்படம் வெளியிடும் திகதியை முடிவு செய்யும் போது தணிக்கைக்கான காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg