Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சபரிமலை ஆலயத்திற்குள் பெண்கள் செல்லத் தடை: வழக்கில் ஏற்பட்ட திருப்பம்

In இந்தியா
Published: 08:30 GMT, Oct 28, 2017 |
0 Comments
1443
This post was written by : Kemasiya
dgfefg

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குள், 10 தொடக்கம் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உள்நுழைய விதிக்கப்பட்ட தடை வழக்கை, 50 நீதிபதிகள் கொண்ட அமர்வில் அல்லது ஜூரி வகையில் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, மேல் நீதிமன்றில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இடம்பெற்றுவரும் நிலையில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற 5 ஆம் அமர்வின் போது நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து நீதிபதி குறிப்பிடுகையில்,

இந்த பிரச்சினையை பெண்களால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். எனவே இந்த வழக்கை, 50 பெண் நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்க வேண்டும்.  இல்லையேல் யூரி முறையில் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன் இந்த விசாரணைக்காக, மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், என்போரை நியமிக்கலாம் எனவும் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg