Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கு ஸ்கொட்லாந்து வரவேற்பு

In
Updated: 09:44 GMT, Oct 28, 2017 | Published: 09:44 GMT, Oct 28, 2017 |
0 Comments
1347
This post was written by : Suganthini

கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்துக்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து அமைச்சரவையின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளர் பியோனா ஹிஸ்லோப் (Fiona Hyslop) நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்துக்கு வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரிய கதலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்துக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். கதலோனிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொண்டுள்ள நிலையிலேயே, அதற்கு மதிப்பளித்து நடக்க முற்படுகின்றோம்.

இதேவேளை, கதலோனிய அரசாங்கத்தின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்கும் நிலைமையை ஸ்பெய்ன் அரசாங்கம் கொண்டுள்ளது. இருப்பினும், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறமையை கதலோனிய மக்கள் கொண்டிருக்க வேண்டும்.

மேலும், கதலோனியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் தீர்வு காணும் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்கும் பாரிய பொறுப்பு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உண்டு’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg