Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க்கப்பல் இலங்கையில்!

In இலங்கை
Updated: 11:26 GMT, Oct 28, 2017 | Published: 11:26 GMT, Oct 28, 2017 |
0 Comments
1733
This post was written by : Vithushagan

ஐக்கிய அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group என்ற மிகப் பெரிய போர்க்கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்புத் துறைமுகத்திற்கு  வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் தரித்து நிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கப்பலின் நீளம் 333 மீற்றர் என்பதுடன், ஐயாயிரம் கடற்படையினர் தங்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது.

இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த குழவினரின் வருகை உறுதி செய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்த கப்பலின் வருகை மூலம் இலங்கைக்கு சுமார் 150 கோடி ரூபா பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு 1985 ஆம் ஆண்டு வந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.​

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg