Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் மோடி கர்நாடகா விஜயம் – புதிய ரயில் சேவையை ஆரம்பிக்கிறார்!

In இந்தியா
Published: 05:04 GMT, Oct 29, 2017 |
0 Comments
1245
This post was written by : Kemasiya
modi3-kSKE--621x414@LiveMint

கா்நாடகாவில் பீதர் மாவட்டத்தில் பயணிகள் நலன் கருதி  புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பீதர் மாவட்டத்தில் இருந்து கலபுரகிக்கு 104 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் சேவையை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்துவைக்கவுள்ளர்.

குறித்த ரயில் சேவையின் வெள்ளோட்டம் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் இன்று திறந்துவைக்கும் குறித்த ரயில் போக்குவரத்து பாதையினால், ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ரயில்வே நிலையத்தின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்த பின்னர், மாலை 6.30 மணியளவில் பீதர் மைதானத்தில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் பீதர் பயணத்தையொட்டி, பெங்களூர், பீதர், மங்களூர் அகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இன்று காலை 10.15 மணியளவில் டெல்லியில் இருந்து மங்களூர் புறப்படும் மோடி, 11 மணியளவில் ‘மஞ்சுநாதா’ ஆலயத்தின் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் பெங்களூர் செல்லும் அவர், ‘தசமா சவுந்தர்யகாரி பரயாநோதடசவா’ என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

குறித்த நிகழ்வின் பின்னரே, பிரதமர் மோடி பீதர்  ரயில் நிலையத்தை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg