Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து முழுத் தகவல் இல்லை: பிரதமர் அலுவலகம்!

In இந்தியா
Published: 07:39 GMT, Oct 30, 2017 |
0 Comments
1265
This post was written by : Kemasiya
narendra-modi-latest7-11-1489230613

பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த நேரம் மற்றும் அவரின் பயணத்தால் கிடைத்த பலன்களை அளவிட முடியவில்லை.  அது குறித்த தகவல்களும்  தம்மிடம் இல்லை என, பிரதம அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் ஆணையகத்தில்,  கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தொடர்ந்திருந்த மேல்முறையீடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரதமர் அலுவலகம் இன்று (திங்கள் கிழமை) தகவல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் கிடைத்த பலன்களையும், அவர் செலவு செய்த நேரத்தையும் அளவிட முடியாது. அவை தங்கள் ஆவணத்தில் இல்லை. என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  பிரதமரின் பயண செலவீனத் தொகை, இந்திய ஒருங்கிணைந்த நிதியில் இருந்தே செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த செலவீனங்கள், அங்கு அவர் செலவிட்ட நேரம், அதன் மூலம் கிடைத்த பலன்கள் குறித்த விபரங்களை அளிக்குமாறு, கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதற்கு பிரதமர் அலுவலகம் முழுத் தகவல்களும் இணையத்தளத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து,  பிரதமரின் பயணத்தின் போதான செலவு, அவர் செலவு செய்த நேரம் என்பன, இணையத்தில் இல்லை என கூறி, மீண்டும் கீர்த்திவாஸ் மண்டல் மேன் முறையீடு செய்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் முகமாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg