Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் தமிழ்- முஸ்லிம் மக்களிடையிலான பதற்றம் தணிந்தது

In இலங்கை
Updated: 07:59 GMT, Oct 30, 2017 | Published: 07:56 GMT, Oct 30, 2017 |
0 Comments
1744
This post was written by : Risha
1

மட்டக்களப்பின் வாழைச்சேனை மற்றும் கிரான் பகுதிகளில் ஏற்பட்ட இன முறுகலையடுத்து, தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்து நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது.

எனினும், குறித்த பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பேருந்து தரிப்பு நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் முச்சக்கர வண்டிகள் நிறுத்தப்பட்டதனால் தமிழ் – முஸ்லிம் சமூகங்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கிரான் வாராந்த சந்தை வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை கூடியபோது, கிரான் பிள்ளையார் கோவிலின் ஒலிபெருக்கி ஊடாக கிரான் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யக் கூடாது என தெரிவித்து அனைத்து முஸ்லிம் வியாபாரிகளும் 30 நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்;பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை எற்பட்டது.

இவ்வாறாக குறித்த பகுதிகளில் தோற்றுவிக்கப்பட்ட பதற்றம் தணிந்து தற்போது சுமூக நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில், இன வன்முறைகளைத் தூண்டிவிடும் விஷம சக்திகளின் செயற்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg