Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: சுமார் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழக்கும் சாத்தியம்

In
Published: 09:49 GMT, Oct 31, 2017 |
0 Comments
1276
This post was written by : Suganthini
bank

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்குப் பின்னர், நிதித்துறைப் பிரிவுகளில் சுமார் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழக்கும் சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானியாவிலுள்ள வங்கியொன்று எச்சரித்துள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக வெளியேறுவதற்கு எண்ணியுள்ளது. இதன் பின்னர், நிதித்துறைப் பிரிவுகளில் வேலைவாய்ப்புகளை இழக்கும் சாத்தியம் ஏற்படும்.

இருப்பினும், பிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான இடைக்கால வர்த்தக உறவைப் பொறுத்து, இந்த எண்ணிக்கையில் கணிசமானளவு மாற்றம் ஏற்படலாம் எனவும் அவ்வங்கி கூறியுள்ளது.

மேலும், வங்கிகளிலும் வேலைவாய்ப்புகளை இழக்கும் சாத்தியம் காணப்படுவதுடன், பல வேலைவாய்ப்புகள் ஏனைய இடங்களுக்கு மாறுவதற்கான நிலைமையே காணப்படுகின்றது எனவும் அவ்வங்கி கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg