Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடு அழிவுப் பாதையில்!- எச்சரிக்கிறது கோட்டாவின் அமைப்பு

In இலங்கை
Updated: 10:26 GMT, Nov 3, 2017 | Published: 07:36 GMT, Nov 3, 2017 |
0 Comments
1304
This post was written by : Risha

அழிவை எதிர்நோக்கவுள்ள நாட்டின் தலையெழுத்தை மாற்றி, நாட்டை அழிவிலிருந்து மீட்கும் பொறுப்பு பொதுமக்களின் கைகளிலேயே உள்ளது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய சிவில் சமூக அமைப்பின் செயற்பாட்டாளர் சிறியந்த மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நூலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கோட்டாபயவின் ‘எலிய’ சிவில் சமூக அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டு, நாட்டில் அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்படுமாயின் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இதனை புரிந்துக் கொள்ளாத அரச தலைவர்கள், அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தும் வகையிலான புதிய அரசியலமைப்பினை நிறைவேற்றுவதில் மும்முரம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டையும், பொதுமக்களையும் காப்பாற்றும் மிகப் பாரிய பொறுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg