Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைத்து மதிப்பிட வேண்டாம்: வடகொரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

In
Published: 05:51 GMT, Nov 8, 2017 |
0 Comments
1262
icon_com
This post was written by : Suganthini
trump

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வடகொரிய நெருக்கடியை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘அமெரிக்காவை வடகொரியா குறைத்து மதிப்பிடுவதைக் கைவிட வேண்டுமென்பதுடன், எந்தவொரு நடவடிக்கையையும் எம்மீது  முன்னெடுப்பதற்கு  வடகொரியா  முயற்சிக்கக்கூடாது’ எனவும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, வடகொரியாவின் இருண்ட கனவுலக வாழ்க்கையையும் அவர் கண்டித்துள்ளார்.

‘அணுவாயுதத்திட்டத்தை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் கைவிட வேண்டுமென்று நாம் வலியுறுத்தும் அதேவேளை, வடகொரியா அணுவாயுதத்திட்டத்தை கைவிடும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு சீனா, ரஷ்யா உட்பட உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளும் எம்முடன் இணைய வேண்டும்’ எனவும் அவர் கோரியுள்ளார்.

‘பேரழிவை ஏற்படுத்தும் அணுவாயுதத்தைக் கொண்டு வடகொரியா முன்னெடுக்கும் முரட்டுத்தனமான ஆட்சியை உலகிலுள்ள மக்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, வடகொரியாவின் முரட்டுத்தனமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு, அந்நாட்டுக்கு ஆதரவளிப்பதைக் கைவிட்டு, பொறுப்புள்ள அனைத்து நாடுகளும் எம்முடன் இணைய வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg