Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கீதாவைப் போல கூட்டமைப்பினர் தொடர்பிலும் ஆராய வேண்டும்! – மஹிந்த அணி

In இலங்கை
Published: 10:44 GMT, Nov 8, 2017 |
0 Comments
1244
This post was written by : Varshini
sisira jayakody

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்கவை நீக்கியது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் அரசாங்கம் ஆராய வேண்டுமென மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

கீதா குமாரசிங்கவிற்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளதைப் போன்று, மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டை பிராஜாவுரிமை உள்ளதென சிசிர கூறியுள்ளார். குறிப்பாக கனடா, அவுஸ்ரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரஜாவுரிமையை கொண்டுள்ளதாகவும், எனினும் அது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட நாடுகள் வழங்குவதற்கு முன்வருவதில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம் என்று உள்நாட்டலுல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டிருந்த போதும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமென சிசிர குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சம்பந்தப்பட்ட நாடுகள் மற்றும் அந்நாடுகளுடன் தொடர்புடைய தூதரங்களில் இலங்கை அரசாங்கம் நேரடியாக தலையிட்டு விபரங்களை பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். எனினும், அரசாங்கம் இவ்விடயத்தில் அக்கறையின்றி செயற்படுவதாகவே தெரிகின்றதென சிசிர ஜயக்கொடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg