Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து மீண்டும் அடுத்தவாரம் ஐ.நாவில் மீளாய்வு

In இலங்கை
Updated: 06:05 GMT, Nov 11, 2017 | Published: 05:31 GMT, Nov 11, 2017 |
0 Comments
1193
This post was written by : Arul Jesu
unhrc-759

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

அத்துடன் இந்த கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்தும், பயங்கரவாத தடைசட்டம் தொடர்பிலும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பாக அறிக்கையும், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

கடந்த 2008 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளிலும் சர்வதேச பருவகால மீளாய்வு கூட்டம் நடைபெற்றிருந்தமை கவனிக்கதக்கது.

எவ்வாறாயினும் போர்குற்றங்கள் தொடர்பில் தமிழர் தரப்பில்  வெளிநாட்டு விசாரணைகளே வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படும் நிலையில், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் உள்நாட்டிலேயே பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg