Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியா கொலை வழக்கில் சிக்கியவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

In இலங்கை
Updated: 06:14 GMT, Nov 15, 2017 | Published: 06:14 GMT, Nov 15, 2017 |
0 Comments
1276
This post was written by : Varshini

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் என்பவரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரைக் கூறி கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில், இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு, நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் முடிவடையவில்லையென மன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கவனத்தில் எடுத்த ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியாழ், சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg