Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அசல் போலவே உருவாகும் போலிகள்! – கனடா மக்களுக்கு எச்சரிக்கை

In கனடா
Published: 12:38 GMT, Nov 20, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Puvanes
canada_fake001

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் போலி டொலர்களின் பாவனை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் உணவு நிலையங்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிலையங்களிலும் போலியான 100 டொலர் தாள்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் 30 இற்கும் அதிகமான போலி டொலர்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த டொலர்கள் பொலிமெர் எனப்படும் காகிதத்தின் மூலம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் FKW4346846 எனப்படும் போலி வரிசை எண்கள் (சீரியல் இலக்கம்) காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி டொலர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் அவை அச்சிடப்பட்டுள்ளதாகவும் தொடர் இலக்கங்களும் சந்தேகம் இல்லாத வகையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், முடிந்த வரையிலும் வழங்குனரின் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறாக போலி டொலர்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ள கனடா பொலிஸார், போலி டொலர்கள் சிக்குமிடத்து உடனடியாக தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg