Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானில் நிலநடுக்கம்: 42 பேர் படுகாயம் (2ஆம் இணைப்பு)

In உலகம்
Published: 05:25 GMT, Dec 1, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Suganthini

ஈரானின் கெர்மன் நகரில் ஏற்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பல வீடுகள் சேதமடைந்துள்ளனர். இந்நிலையில், மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஹஜ்டாக் கிராமம் உட்பட சில கிராமங்களில் மின்விநியோகமும் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

ஈரானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ஈரானின் கெர்மன் நகரில் 6.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் நிலையம் அறிவித்துள்ளது.

கெர்மன் நகரிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது.

இருப்பினும், இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg