Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீதான ராணுவ நடவடிக்கை தவறு: ரஷ்யா எச்சரிக்கை

In உலகம்
Updated: 05:33 GMT, Dec 2, 2017 | Published: 05:33 GMT, Dec 2, 2017 |
0 Comments
1570
This post was written by : Suganthini

வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானிப்பது தவறானதென, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ரோமில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘போர் மூண்டால் வடகொரியாவின் ஆட்சி முற்றாக அழிக்கப்படுமென்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்தப் பேச்சு கண்டிக்கப்பட வேண்டியதாகும். வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பது, தவறான நடவடிக்கையாகும்’ என்றார்.

மேலும், ‘இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க, ராஜதந்திர ரீதியாகவும் சமாதான ரீதியாகவுமே அணுக வேண்டும்’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி,  Hwasong-15  எனும் ஏவுகணைச் சோதனையில் வடகொரியா ஈடுபட்டது. இதனையடுத்து, வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே, அமெரிக்கா போரை விரும்பவில்லை. இருப்பினும், போர் மூண்டால் வடகொரியாவின் ஆட்சி முற்றாக அழிக்கப்படுமென்று எச்சரித்திருந்தார். இந்நிலையிலேயே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg