Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுட்ட கத்தரிக்காய் கூட்டு

In
Published: 11:47 GMT, Dec 3, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Risha
hqdefault

தேவையான பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் – 1,

பொடியாக நறுக்கிய தக்காளி,

வெங்காயம் – 50 கிராம்,

புளி – சிறிய எலுமிச்சை அளவு,

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,

கடுகு,

உளுத்தம்பருப்பு,

கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி,

பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

 

செய்முறை

 

கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும்.

தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும்.

புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg