Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த மைதானத்தில் நியூசிலாந்து ஆதிக்கம்: முதல் டெஸ்டில் மே.தீவுகள் அணி படுதோல்வி

In கிாிக்கட்
Published: 04:47 GMT, Dec 4, 2017 |
0 Comments
1082
icon_com
This post was written by : Anojkiyan
wag

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 1ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 134 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கியரன் பவல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நெய்ல் வாக்னர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனையடுத்து தனது முதலாவது முதலாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 520 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக டொம் பிளண்டெல் 107 ஓட்டங்களையும், கொலின் டி கிராண்ட்ஹாம் 105 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

386 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 319 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 67 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.

மேற்கிந்திய அணிகள் சார்பில் க்ரேக் ப்ரத்வெயிட் 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மெட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணி சார்பில், பந்து வீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நெய்ல் வாக்னர் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg