Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக ஹொக்கி லீக்: பெல்ஜியம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

In விளையாட்டு
Updated: 05:48 GMT, Dec 4, 2017 | Published: 05:48 GMT, Dec 4, 2017 |
0 Comments
1194
This post was written by : Anojkiyan

உலக ஹொக்கி லீக் தொடரில், பெல்ஜியம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றுள்ளது.

புவனே சுவரத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இப்போட்டியில், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிக்கொண்டன.

பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், போட்டியின் 3வது நிமிடத்தில் பெல்ஜியம் தனது கோலை அடித்தது. அணியின் ஃப்ளாரென்ட் வோன் அபெல் முதல் கோலை அடித்து இரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்நிலையில், ஸ்பெயினுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி நேரத்திலும் பெல்ஜியம் அணியே ஆதிக்கம் செலுத்தியது. பெல்ஜியம் அணியின் லாய்க் லுய்பெர்ட் 38வது நிமிடத்தில் அணியில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

இதையடுத்துஅவரே 57வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடிக்க, அடுத்த நிமிடத்திலேயே சக வீரர் செட்ரிக் சார்லியரும் கோல் அடிக்க, பெல்ஜியம் 4-0 என முன்னேறியது. 59வது நிமிடத்தில் அணியின் லாய்க் லுய்பெர்ட் மற்றுமொரு கோல் அடிக்க பெல்ஜியம் 5-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வெற்றிபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg