Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தே நல்லாட்சி அரசு செயற்படுகின்றது: பிரதமர்

In இலங்கை
Updated: 10:20 GMT, Dec 5, 2017 | Published: 10:11 GMT, Dec 5, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman
_93206039_ranil

நல்லாட்சி அரசானது பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசார நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் 850 விகாரைகளுக்கான நிதியுதவி அளிக்கும் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சியில் நாம் பல கட்சிகளை அரவணைத்துக் கொண்டு நாட்டினை வழிநடத்திச் செல்கின்றோம். அரசாங்கம் என்ற வகையில் இந்த நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் பொதுமக்களின் நலனில் அதிகளவு அக்கறையுடன் செயற்படும் நாம், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்தல் என்ற அடிப்படையில் கீழ் மக்களது ஏனைய அனைத்துக் கோரிக்கைகளையும் பெற்றுத்தர முடியும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)