Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீனின் விலை அதிகரிப்பு – கேள்விக்கேற்ப மீன்களும் இல்லை!

In இலங்கை
Published: 05:08 GMT, Dec 6, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Varshini

இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வதில்லையென திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலுக்குச் சென்ற படகுகள் மற்றும் சிறு வள்ளங்கள் என்பன, இயற்கையின் சீற்றம் காரணமாக அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பிரகாரம் கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டன.

இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை சந்தையிலுள்ள மொத்த மற்றும் சில்லறை மீன் வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது ஓரளவு காலநிலை சீரடைந்து மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற போதிலும், போதிய மீன்கள் கிடைப்பதில்லையென மீனவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

எனினும், கடற்பிரதேசங்களில் மாலை வேளைகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால், கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்நிலை தொடருமாக இருந்தால், மீன்பிடியையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் தமது நிலை மோசமடையுமெனக் குறிப்பிடும் மீனவர்கள், அரசாங்கம் தமக்கான நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

fish (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)