Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக மருத்துவமனை பொலன்னறுவையில்!

In இலங்கை
Published: 17:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Vithushagan
24883298_10155713264486327_212455634959582575_o

சீன அரசாங்கத்தின் நட்புறவின் அன்பளிப்பாக பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கு இன்று ( புதன்கிழமை) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மருத்துவமனை தெற்காசியாவிலேயே விசாலமான சிறுநீரக மருத்துவமனையாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

 பொலன்னறுவை தள மருத்துவமனையை அண்மித்த 28 ஆம் கட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த தேசிய சிறுநீரக மருத்துவமனைக்கான நிதி சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில், சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதி அமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, பொலன்னறுவை பொது மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இந்திக்க சம்பத் குமார ஆகியோரும் இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியென்லியங் உள்ளிட்ட அதிதிகளும்  கலந்துகொண்டனர்.

24799353_10155713264961327_110152706950725098_o 24831539_10155713265186327_8981063745592520165_o

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)