Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவின் ஆயுத விற்பனைக்கு கண்டனம்

In
Updated: 09:10 GMT, Dec 10, 2017 | Published: 07:43 GMT, Dec 10, 2017 |
0 Comments
1427
This post was written by : Suganthini
arm

சவுதி அரேபியாவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்தமை சட்டவிரோதமான நடவடிக்கையென்று, பிரித்தானியாவிலுள்ள உரிமைக் குழுவொன்று கண்டித்துள்ளது.

இது தொடர்பாக  ஆயுத விற்பனைக்கு எதிரான அமைப்பு  நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சவுதி அரேபியாவுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்துள்ளமை சட்டவிரோதமான நடவடிக்கையாகுமென்பதுடன், இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு பிரித்தானியா அரசாங்கம் உடந்தையாக இருந்துள்ளது. எனவே, யேமனில் இடம்பெற்ற மோதலின்போது, சவுதிக்கு எதிரான யுத்த நடவடிக்கையில் பிரித்தானியாவும் இணைந்துள்ளதாகக் கருத முடியும்.

மேலும், சவுதிக்கு விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள், யேமனில் பொதுமக்களைக் கொல்வதற்கே பயன்படுத்தப்பட்டன. ஐ.நா.வின் தகவலின்படி, யேமனில் கடந்த இரண்டரை வருடங்களாக சவுதியால் முன்னெடுக்கப்பட்ட மோதலில் சிக்கி 12 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யேமனில் இடம்பெற்ற இந்த அழிவு மிகப் பயங்கரமானது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg